அன்னிய இனப் பெண்னை மணந்த தமிழன் தனி தமிழ் பேசலாமா!


"அன்னிய இனப் பெண்னை மணந்த தமிழன் தனி தமிழ் பேசலாமா!"



தமிழகத்தில் தமிழனொருவன் தனி தமிழ் பேசினாலோ, தமிழ் தேசிய நலன் குறித்தோ, சுய நிர்ணய உரிமைக்குறித்து பேசினாலோ அவனை அரசியலாக எதிர் கொள்ளத்திராணியற்ற வடுக, கன்னட, மலையாளிகள், குறிப்பாக திராவிடத்தின் பெயரால் தமிழகத்தை சுரண்டி கொழுக்கும் கூட்டம் தமிழனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை விமர்சித்து வாயடைக்கும் வேலையை செய்ய முயற்சிப்பதை பார்த்திருப்பீர்கள்

 

பலவீனமே இல்லாத மனிதன் இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யும். பலவீனமற்றவனே சுயநிர்ணய உரிமை குறித்து பேச வேண்டுமென்றால் அது உலகில் எவருக்கும் பொருந்தாது. மேலும் பலவீனமே அற்ற தமிழர்கள் இம்மண்ணில் இருந்திருந்தால் திராவிடவாதிகளின் கை ஓங்கி இருக்காது. இன்று ஒரு திரைப்பட சங்கத்துக்கு கூட பெயர் மாற்ற போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

 

மூன்று தலைமுறை தமிழ் நாட்டில் வாழ்ந்து விட்டோம் எனவே,நாங்களும் தமிழர்கள் தான் என்று வெகட்கமில்லாமல் பேசுகிறார்கள் வந்தேறிகள்.
இவர்கள் இன அதிகாரம் கோலோச்சும் மாநிலங்களில் தமிழர்கள் பூர்வீக குடிகளாவர். ஆரிய திராவிடவாதிகளின் சூழ்ச்சியால் தமிழகத்தின் பூர்வீக மண் மாநிலப் பிரிவினையால் கொள்ளை போனது அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு அவர்கள் மாநிலங்களில் என்ன அதிகாரம்! வழங்கப்பட்டுள்ளது. உரிமைகள் அற்ற அகதிகள் போல் அல்லவா வாழ்ந்து வருகிறான் தமிழன்.

 

ஆனால் இங்கு இவர்கள் அடிக்கும் கொட்டமோ சொல்லில் மாளாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வேந்தர்களை மதத்தின் பெயரால் மடையர்கள் ஆக்கி சிறிது சிறிதாக தமிழகத்தை அரித்து, விஜய நகர பேரரசால் தமிழக மக்களை சூரையாடி, கொலை செய்து, கொள்ளை இட்டு, முதலாம் குலோத்துங்கன் என்ற கன்னட வடுகனின் அதிகாரத்தால் மக்களை சாதி சாதியாய் பிளவு படுத்தி, பாளையப்பட்டுக்களால் கூறு போட்டு கொள்ளையிட்டு அதன் பின் வெள்ளையனுக்கு காவடி தூக்கி அரசியல் அதிகாரத்தை ஆசை தீர நுகர்ந்து, ஆரியக்கூட்டோடு இந்து மதத்தை இம்மண்ணில் நிறுவி இந்து மதத்துக்கும், தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறியாவண்ணம் மதமற்ற தமிழனின் பண்பாட்டை சிதைத்து இந்து மதப்பண்பாட்டிற்கும் தமிழனின் பண்பாட்டிற்கும் வேறுபாடு அரிய இயலா வண்ணம் தமிழனைக் குழப்பி தமிழனுக்கென்று எந்த வகையிலும் தலைவனும், தலைமையும் உருவாகி விடா வண்ணம் அழித்தும், தொன்மையை மறைத்தும் சாதி தலைவர்களை உருவாக்கி, அவர்களை கொம்பு சீவி பிழைப்புவாதிகளாக்கி அதற்க்கான அரசியல் சதிகளை செய்து விட்டு சாதிமறுப்பு, கடவுள் மறுப்பு என .வே,ராமசாமி மூலம் பூச்சாண்டி காட்டி, வடுக, கன்னட, மலையாள மக்கள் இங்குள்ள வளங்களை கொல்லையிட்டு தின்று கொழுக்க, தமிழன் தன் உழைப்பு, திறமை, இருப்பிடம், அரசியல், பொருளாதாரம் அனைத்தையும் இழந்து வாய் சப்பி, போராட திரானியற்று சோர்ந்து கண்ணீர் விட்டு நிற்கிறான்.

 

கற்ப்பொழுக்கம் அற்ற கதாப்பாத்திரங்களையே ஏற்று நடித்த திரைப்பட நடிகை சங்கீதா என்ற திராவிட கொண்டி பெண் ஒருத்தி தந்தி தொலைக்காட்சியில் 17/10/2015ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏழு கோடி தமிழனிருக்கிறான் என்பதற்காக முட்டாள்களுக்கு பதவி தர முடியுமா! என்று கேட்டக் கொடுமையை நாம் சகித்து வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்.

 

ஆர்.கே.செல்வமணி என்ற தமிழ் இயக்குனரை ஏழுகோடி தமிழனில் உனக்கு பெண் ஒருத்தி கிடைக்க வில்லை என்று தானே தெலுங்கு நடிகையை திருமணம் செய்தாய். இப்பொழுது என்ன உங்களுக்கு தமிழ் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது எனக் கேட்க, அதற்கு பதில் சொல்ல இயலாமல் இயக்குனர் வாயடைத்து போனதை பார்க்க நேர்ந்தது. .வே.ரா.வில் தொடங்கி திராவிட நடிகை ஒருத்தி நம்மை முட்டாள்கள் என்று சொல்லும் அளவிற்கு நாம் தரம் தாழ்ந்து இருக்கிறோம் என்பதை அறியவும்.

 

வடுக கன்னட மலையாள பெண்களை எந்த தமிழனாவது மணந்து விட்டால் அவனுக்கு தனி உரிமை தேவையில்லை என்றும் அந்த இனமே நம் இனத்தின் அடிமை என்கின்ற மமதையும் அவர்களுக்கு வந்து விடுவதைப் பார்க்கிறோம்.

 

திருமணம் என்பது பிரிந்து போகும் உரிமையுடன் கூடியது. விரும்பினால் மணந்து கொண்ட வேறு இனத்துப் பெண்னை விவாகரத்து செய்துவிட்டு, தமிழ் பெண்னை மணந்து கொள்ள முடியும். ஒருப் பெண்னை மணந்து கொள்வது என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆசை. இனம் என்பது அவனின் அடையாளம் அந்த இனம் அடிமைப் பட்டு கிடக்குமாயின் அதை மீட்க போராடுவது அவனது உரிமை. இந்த வடுக கன்னட மலையாளிகளுக்கு எப்படிப் பட்ட நெஞ்சழுத்தம் பார்த்தீர்களா! அரசியலாய் எதிர் கொள்ள திணருகிறபொழுது, அவனுடைய சொந்த வாழ்க்கைக்குள் புகுந்து விமர்சிப்பது பெரியாரிலிருந்து கருணாநிதி வழியாக இன்று வடுக, கன்னட, மலையாளிகள் வரை தொடர்கிறது. தமிழ் பெண்களை மணந்த பிற இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ் தேசிய இனத்தின் அடிமைகளாகிவிட்டார்களா ?!
பிற இனத்துப்பெண்னை மணந்து கொண்டதாலே அவன் தனி தமிழ், தமிழ் தேசியம் என பேசும் தகுதியை இழந்து விட்டான் என்றும், இழந்து விட வேண்டும் எனவும் பேசுவது தமிழனின் சிந்தனையை முடமாக்க முயற்சிக்கும் வேலையல்லவா !

 

திரைஉலகில் அன்னிய இனம் உட்புகுந்து ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது திரை உலகில் உள்ள தமிழர்கள் செய்த தவறே காரணம்.அதற்கு அடையாளமாக 18/10/2015 நடிகர் சங்க தேர்தல் நடைபெற்ற அன்று மாலையே சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. மேடையில் பாரதிராஜா என்ற ஒரு பிரபல கிராமத்து தமிழ் இயக்குனர், அவரை சுற்றிலும் சினிமா நடிகைகளின் பட்டாளம், அந்த நடிகைகளில் ஒருவர் கூட தமிழ் நடிகை இல்லை அதில் ராதிகா என்ற நடிகை சொல்லுகிறார் பாரதிராஜாவுக்கு நடிகர்களை பிடிக்காது, நடிகைகளைத்தான் பிடிக்கும் எனக்கிண்டல் அடிக்கிறார். வெட்கத்தால் நாணுகிறார் பாரதிராஜா. மதுரை சித்திரை வீதியில் நடிகரை தேடி பிடித்த பாரதிராஜாவுக்கு ஒரு தமிழ் நடிகையை தேடி பிடிக்க முடியவில்லை. கல்லையும் நடிக்க வைப்பாராம் பாரதிராஜா ! ஏன் தமிழர்களில் நடிகையை தேடவில்லை என புரியவில்லை. சொட்டாங்கியாய் தமிழ் பேசும் தமிழ் பெண்களைவிட, தமிழை கொலை செய்து, கொலை செய்து பேசும் வடுக, கன்னட, மலையாள பெண்கள் மீது மோகம் கொண்டது ஏனோ ?! இப்படி திராவிட பெண்களுக்கு அலையும் தமிழனால் தானே தமிழ் கெட்டது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மூவேந்தர்களும் கற்ப்பொழுக்கம் அறியா ஆரிய, திராவிட பெண்கள் வலையில் சிக்கியதால் தானே அரசாட்சியை இழந்தார்கள், மடையர்களானார்கள், பரதேசிகளாயினர். தமிழன் தன் வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டாமா ! இன்று அய்யோ ! அதிகாரம் பறிபோகிறதே ! அரசியல் சதுரங்கம் விளையாடுகிறதே ! மரியாதை போய் விட்டதே ! மானம் போகிறதே ! திராவிடவாதிகள் கூட்டம் உட்புகுந்து ஆட்டம் போடுகிறதே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

போனது போகட்டும் இன்று முதல் என் அறிவு, ஆற்றல், உதவி, உழைப்பு அனைத்தும் இந்த தமிழ் மண்ணுக்குத்தான். தமிழ் இன வளர்ச்சிக்குத்தான். இனி ஒரு பொழுதும் வடுக, கன்னட, மலையாளிகளில் எந்த நடிகர், நடிகை, இயக்குனர், உதவியாளர் என்று யாரையும் தமிழ் திரையுலகில் வளர்த்தெடுக்க மாட்டேன் என்று பாரதிராஜா போன்ற தமிழ் இயக்குனர்கள் தமிழ் அன்னை சிலை முன் நின்று சத்தியம் செய்ய வேண்டும். உறுதி மொழி எடுக்க வேண்டும். எல்லோரையும் போல் நானும் தமிழும், திராவிடமும் ஒன்று என எண்ணி ஏமாந்து போனேன். திராவிடமென்பது தமிழன் மீது திணிக்கப்பட்ட அரசியல் சதி என்பதை உணர்கிறேன். தமிழ் தாயே என்னை மன்னித்து விடு என்று சபதமேற்க வேண்டும். அதற்கு பாரதிராஜாவுக்கு வலிக்குமென்றால் இனி தன் பெயரை பரதேசிராஜா என வைத்துக்கொள்ளட்டும்.

 

திராவிடவாதிகள் சுதாரிப்பு இல்லா தமிழனையெல்லாம் அந்தந்த துறைகளில் பரிதவிக்கும் பரதேசி நிலைக்குத்தான் தள்ளிக்கொண்டுஇருக்கிறார்கள் என்பதை உணரவும். ஒரு உதாரணத்துக்காகவே திரைதுறையை எடுத்துக்கொண்டோம் ஆனால் எல்லாத்துறைகளிலும் இதே நிலைதான்.
நடிகர் சங்கத்தேர்தலின் போது கமலகாசன் என்ற ஒரு தமிழர் தென்னிந்திய திரைப்படச்சங்கத்தை இந்திய திரைப்படச்சங்கமென மாற்ற வேண்டும் என்றார். மாராட்டிய, கன்னட ரஜினி காந்துக்கு வந்த அறிவு கூட இந்த தமிழனுக்கு வராதது வருத்தமே. இருப்பினும் .வே.ராமசாமி அடித்த அடியில் நொண்டியாகிபோன சமூகம் பார்ப்பனச் சமூகமல்லவா ! அந்த நொண்டி காலை இந்தியா என்ற காலை ஒட்டுப்போட்டுத்தானே நடந்தாக வேண்டும். பிரச்சனை வந்தால் அதை எதிர் கொள்ள திராணி அற்று நாட்டை விட்டே ஓடுபவராயிற்றே ! அது அவர் தவறல்ல போராட்ட குணமற்ற அந்த சமூகத்தின் தவறு. அதனால் அப்படி அவர் சொன்னதில் தவறில்லை.ஆனால் டி.ராஜேந்திரன் என்ற இயக்குனரின் மகன் சிலம்பரசன் சுத்தமானத் தமிழன் தான். அவரது தந்தை டி.ஆர். இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்றல்லவா தன் கட்சிக்கு பெயர் தாங்கி இருக்கிறார். திராவிடத்தின் பெயரால் கட்சிவைத்துக் கொண்டு தமிழ் நாடு திரைப்படச் சங்கம் என பெயர்வைக்கும்படி மகன் கூறினால் வடுக, கன்னட, மலையாளிகள் கேலி செய்ய மாட்டார்களா ! அவர் தந்தையிடம் சொல்லி திராவிடச் சொல்லை நீக்கி தமிழ் என்ற பெயரை வைக்கும் படி கூற வேண்டும். நம் உள்ளத்தில் அணு அளவும் திராவிடத் தாக்கம் இல்லாது பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் திராவிடமென்ற செத்தப்பிணத்தை தூக்கித்திரியும் பித்துப் பிடித்த பன்னாடைகளாகி விடுவோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

இந்த வடுக, கன்னட, மலையாளிகளின் பின்னால் நம்மில் எத்தனைத்தமிழர்கள் அறுப்பவனை நம்பி பின் செல்லும் ஆடுகளைப்போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

 

தேவநேயப்பாவாணர் தமிழன் கெட்டதற்கு காரணமாக மூன்று வித காரணிகளை முன் வைக்கிறார்

 

1.மதப்பித்து 2. கொடைமனம் 3. தன்னினப் பகை என்று வரையறுக்கிறார்.
1.
கடவுள் என்று எதைக் கொண்டு வந்துக் கொடுத்தாலும் வணங்குவது தனக்கென்று ஒரு மதமில்லாத காரணத்தால், ஏதாவது ஒரு மதத்தில் இருந்துக்கொண்டு அதில் தீவிரமாக பின்பற்றி பித்துப் பிடித்து அலைவது அதற்க்காக மதத்தின் பெயரால் சண்டையிடுவது.

 

2.எவனாவது தன்னை புகழ்ந்து விட்டால் தன்னிடமுள்ள எதையும் கொடுத்து விடுவது நம் முன்னோர்களான மூவேந்தர்கள் தனக்கு பிடித்து போய் விட்டால் தன் அரசாட்சியில் பாதி தருகிறேன் என்பார்கள். ஒரு நாட்டை வெற்றி கொள்ள எத்தனை உயிர்களை பலி கொடுத்து, யுத்தம் நடத்தி எவ்வளவு சிரமப்பட்டு கைப்பற்றி இருப்பார்கள், கொஞ்சமும் வாட்ட வருத்தம் ஏதுமின்றி அள்ளி வீசுவது, மதப்பித்து தலைக்கேறி பிராமணர்களுக்கு விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை பிடுங்கி தானம் தருவதில் ஆரம்பித்து இன்று வரை அன்னியர்கள் உட்புகுந்து வாழ வழிவகை செய்து தருவது. படுத்துறங்க திண்ணை கொடுத்தால் இந்த திராவிடர்கள் வீட்டையே பிடுங்கிக் கொள்வார்கள் என்பதை அறியாது ஏமாந்து போனது வரை, வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்றவுடன் மெய் சிலிர்த்து போய் உள்ளதையெல்லாம் கொடுத்துவிட்டு தெருவுக்கு வந்து கையை பிசைந்து கொண்டு நிற்பது வரை தமிழனிடமுள்ள கொடை மனம் தானே ! ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை செத்துப்போகும் என்பதைக்கூட அறியாமல் தன் பிள்ளை தானே வளரும் என்ற முட்டாள்தனமான பழமொழியால் வீழ்ந்து போனவன் தமிழன் தானே.

 

3. தன் இனத்தை சேர்ந்த ஒருவன் தலைவனாய் இருப்பதை தமிழன் சகித்துக் கொள்வதில்லை இவனெல்லாம் ஒரு ஆளா என்று சேரன் என்ற தமிழ் இயக்குனரை ரித்திஸ் என்ற மற்றொரு தமிழன் கேவலமாக பேசியதை பார்த்திருப்பீர்கள் (இது ஒரு சிறு உதாரணம் தான்) பொதுவாக அடிமைச்சமூகம் என்பதால் எவனோ ஒருவன் தலைமை கொடுத்தால் ஆஹா, ஓஹோ என புகழ்வது, ஆனால் தன்னுடன் சேர்ந்து அடிமையாய் இருந்த ஒருவன் தன் அறிவாற்றலால் வளர்ந்து விட்டால் அவனை வளர விடாமல் தடுத்து கீழே இறக்கி மன ஆறுதலடைவது ! இது தமிழனிடம் மட்டுமல்ல அடிமையாய் இருக்கும் எந்த ஒரு சமூகத்திடமும் உள்ள நியதிதான். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாது அதையெல்லாம் மன்னித்து, அவர்கள் நம் சகோதரர்கள் தான் என எண்ணி தொடர்ந்து போராடி சுய சார்புள்ள அறிவாற்றல் உள்ள தமிழ் சமூகத்தை உருவாக்குவோம். தமிழ் இளைஞர்களை ஊக்கப்படுத்தி தமிழனின் வரலாற்றையும், பெருமையையும் உணர்த்தி நம் சுய நிர்ணய உரிமையை பெறுவோம்.

 

மாற்று இனத்துப்பெண்ணை மணந்ததால் ஒருதமிழனுக்கு உரிமை பறிபோய் விட்டதோ என எண்ணாமல் தமிழன் யார் மீதும் எதன் மீதும் ஆசைப் படலாம் தவறில்லை ஆசையை எதன் மீதும் மாற்றிக்கொள்ள முடியும் அனுபவித்தால் ஆசை தீர்ந்து விடும். ஆனால் போராடினால் தான் உரிமையை பெற முடியும். எதன் மீதும் ஆசைப்படு ! ஆனால் தமிழனாய் இரு ! தமிழுக்காக, தமிழினத்துக்காக போராடு ! சாதி மறந்து தமிழனாய் ஒன்றிணைந்து வீழ்த்துவோம் ஆரிய, திராவிட மேலாதிக்கத்தை !

வாழ்க தமிழ் ! வெல்க தமிழினம் !!”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக