ஆரியமும் திராவிடமும் – பாகம்-1

ஆரியமும் திராவிடமும் – பாகம்-1


அன்பிற்கினிய தமிழ் சகோதரர்களே முந்தைய பதிவில் மதம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று ஏகாதிபத்தியங்கள் நம் மீது மேலாதிக்கம் செலுத்தும் இன்றைய காலம் வரை மதமானது அது தோன்றிய இனத்தின் ஆளுமையையும், சுரண்டலையும் தொடர்ந்து காத்து வருகிறது என்றும் தமிழன் தனக்கான மதத்தை தோற்றுவிக்கும் முன்பே பல காலகட்டங்களில் தொடர்ந்து அடிமை பட்டு போனதால் தனக்கான அரசியல் அதிகாரத்தை பெற முடியாமல் சொந்த மண்ணிலும், சர்வதேச நிலையிலும் அநாதை ஆகிப்போனான் என்பதையும் அறிந்தோம். முந்தைய பதிவில் குழப்பம் இன்றி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தங்களுக்கு இப்பொழுது இன்னும் வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் நீடித்திருக்கும் என்பதை நான் அறிவேன் இந்த தடத்தை தொடர்ந்து படித்து வாருங்கள். உங்கள் குழப்பத்திற்க்கும், கேள்விகளுக்கும் அடுத்தடுத்து எழுதப்படும் விடயங்கள் விடையளிக்கும் என கருதுகிறேன்.



                      ஆரியர் என்றாலே அவர்கள் கைபர்,போலர் கணவாய் வழியாக இந்தியாவிற்க்குள் மேய்ச்சல் நிலம் தேடி வந்த நாடோடி அன்னியக்கூட்டமென்று நமக்கு கற்பிக்கப்பட்டிருகிறது. இதையே திராவிட வாதிகள் இன்று வரை உரக்கச் சொல்கிறார்கள். இது அவர்கள் தமிழர்களிடம் அரசியல் செய்ய ஏதுவாக இருக்கிறது தமிழனை பொருத்தவரை, தான் ஒரு இந்து என உணராதப்பட்சத்தில் ஆரியர் மட்டும் வந்தேறிகளல்ல. நம் மீது அரசியல் அதிகாரம் கொண்ட இந்த திராவிடர்களும் வந்தேறிகள் தான் என்பதே உன்மையாகும். ஆதலால் தான், திராவிடர் என்ற வட்டத்திற்க்குள் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளோடு தமிழரையும் இணைத்துக்கொள்கிறார்கள். தமிழ் தான் மூல மொழி என்றும் தமிழில் இருந்தே மேற்க்கண்ட மொழிகளோடு இன்னும் பிற சிறு, சிறு மொழிகளும் தோன்றியதாக கூறும் மொழியியல் ஆய்வாளர் கால்டு வெல், தான் கண்டறிந்த மொழி இலக்கணத்தை தமிழ் மொழி ஒப்பிலக்கணம் என்று சொல்லாமல் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்று வறையறுத்தார். இதற்கு பின்னால் ஒரு ஏகாதிபத்திய அரசியல் மேன்மை தன்மை உள்ளடங்கி இருப்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.



                           புரியும் படியாக சொல்வதானால் நம்மில் கீழ் சாதிகாரன் ஒருவனிடம் ஒரு திறமை அல்லது பெருமைப்படதக்க விடயம் இருக்கிறது என வைத்து கொள்வோம் ஆனால் ஆளும் வர்க்க சாதி அவனை முன்னிறுத்தி புகழாரம் செய்யுமா?! அப்படி செய்தால் அடிமை சாதிக்காரன் பெருமைக்குரியவன்னானால் ஆளும் வர்க்க சாதிக்கு சிறுமை ஏற்ப்பட்டு விடும் அல்லவா. இன்னும் தெளிவாக சொல்லுவதானால் பேராண்மை என்ற ஒரு தமிழ் திரைப்படம் வந்தது. அதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அந்த பார்வையை அப்படியே நம் தமிழ் சமூக வரலாற்றின் பக்கம் திருப்புங்கள் சிறுமைப்படுத்தப் பட்டவர்கள் யாரிடமும் எவ்வளவு திறமை, எவ்வளவு உண்மை இருப்பினும் அவர்கள் முதன்மை படுத்த படுவதில்லை



                           தமிழ் தான் மூல மொழி, தமிழன் தான் உலகில் தோன்றிய முதல் மாந்தன் குமரிக்கண்டம்தான் மனித பிறப்பிடம். அங்கிருந்தே உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் மனிதக் கூட்டம் பிரிந்து சென்றது என்றும் குமரிக்கண்டம் பல்வேறு கடல் ஊழிகளால் அழிவுற்ற பின் எஞ்சிய தமிழ் மக்கள் நாவழந்தீவில்(இந்தியா) முழுவதும் பரவி வாழ்ந்தார்கள்(ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்ததாக டாக்டர் அம்பேத்காரே ஒத்து கொள்கிறார்). நம் வராலாற்று துறை பேராசிரியர் இராமசந்திர தீட்சிதரும் தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற ஆய்வரிக்கையில் நிருபித்திருக்கிறார்  

                        

                           இந்தியாவிற்க்கு வடக்கே ஆதி காலத்தில் இடம் பெயர்ந்து போன மக்களுடன் கலப்பு ஏற்ப்பட்டு பல்வேறு தேசிய இனங்கள் பரிணமித்த பின்பு இறுதியாக தென்னிந்தியாவில் மட்டும் வடுக தமிழாகவும், கருநாடக தமிழாகவும், மலையக தமிழாகவும் இருந்து தனித் தனி தேசியங்களாக பிரிந்து போன தேசிய இனங்களை தமிழ் மொழி குழுமம் என்று சொல்லாமல் திராவிட மொழிக்குழுமம் அல்லது திராவிட மொழி குடும்பம் என இல்லாத ஒருதேசியத்தின் பால் கால்டு வெல் நிலை நிறுத்தி இருக்கிறார். இது ஏகாதிபத்திய நலனுக்கன்றி தமிழ் சமுக நலனுக்கன்று. இது இன்றைய திராவிடவாதிகளுக்கு வெகுவாக பயன்பட்டதால் தான் ஈ.வே.ராமசாமி என்ற கன்னட தெலுங்கர் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் ஏகபோகத்தின் விசுவாசியாகவும் தொடர்ந்து இருந்து வந்தார். இன்று கருனாநிதி என்ற தெலுங்கர் கால்டு வெல்லை தலையில் வைத்து கொண்டாடுகிறார் இத்திராவிட கருத்தியலை இன்று வடுக, கன்னட ,மலையாள தேசியங்கள் ஏற்ப்பதில்லை ஆனால் தமிழகத்திற்க்குள் வந்தேறிகளாக வந்த இவர்கள் தமிழனை திராவிடத்தின் பெயரால் ஏமாற்றி நம் மீது தொடர்ந்து அரசியல் அதிகாரம் செய்கிறார்கள். இதற்கு இந்நிலையை தொடர்ந்து தக்க வைக்க ஈ.வே.ராமசாமி என்ற கன்னட தெலுங்கர் எப்படியெல்லாம் அரும்பாடு பட்டார் என்பதையும் சாதி மத மறுப்பை ஏன் உயர்த்தி பிடித்தார்! அதற்க்கான அரசியல் காரணங்கள் என்ன என்பதை இனி வரும் பதிவுகளில் ஆதாரத்துடன் நாம் தோலுரித்துக்காட்டுவோம்.

(ஆரியமும் திராவிடமும் பாகம் 2 ல் தொடரும்………………………………………………………….) 



பாகம் 2 ஐ படிக்க இதை கிளிக் செய்யவும்  http://historicalorganisationoftamils.blogspot.com/2015/10/2.html 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக