தமிழ் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாள் :-


தமிழ் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாள் :- தேதி:-07/பிப்ரவரி/1902




தமிழே உலகில் தோன்றிய முதல் மொழி என்றும் உலகில் மாந்தர் இனம் தோன்றியது குமரிக்கண்டமே என்றும் உலகின் செம்மொழிகளை ஆய்ந்தறிந்து சொல்லாராய்ச்சி வல்லுனராகவும், தமிழ் அறிஞராகவும் திகழ்ந்தவர் பாவாணர் ஆவார். இவரின் தமிழ் மொழியின் இலக்கிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் இன்று தொல்லியல் ஆய்வின் மூலம் நிருபணமாகி வருகிறது. (உதாரணம் மணலூர் கீழடி தொல்லியல் ஆய்வு)

கிரேக்கம், இலத்தின், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளெல்லாம் தமிழ் சொற்களை கடன் கொண்டே விளங்கின, விளங்குகின்றன என நிறுவினார்.

தமிழில் கலந்துள்ள பிற மொழி சொற்களை நீக்கிவிட்டாலும் எந்த மொழியின் துணையுமின்றி தனித்து இயங்கும் வல்லமை பெற்றது தமிழ் மொழி என்றும், திராவிட மொழிகளோ, சமஸ்கிருதமோ தமிழ் துணையின்றி இயங்காது என்றும் தமிழும், திராவிடமும் ஒன்றல்ல என்றும் ! ஆரியமும் திராவிடமும் ஒன்றே என்றும் நிறுவியவர் !

தமிழ் பால் என்றால், திராவிடம் தயிர் என்றும், பால் தயிராகலாம் ஆனால் தயிர் மீண்டும் பாலாக மாறாது என்றும், பாலோடு தயிர் சேர்ந்தால் பால் திரிந்து தயிர் ஆகுமே தவிர, பாலோடு சேர்ந்த தயிர் மீண்டும் பாலாக மாறாது என்றும் திராவிடமென்பது தமிழுக்கு என்றுமே தீயது என்று நிறுவியவர் !

கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவரது தமிழ் மொழி ஆய்வுக்கு அரசின் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அதிகம் கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டார். ஈ.வெ.ரா. அவரை அலட்சியம் செய்தார். அவரின் குடும்பம் வறுமையில் தான் வாடியது. கருணாநிதி சொல்லுவது போல் தமிழ் ஆய்வு முடிவுகளை செய்திருந்தால், அவரது குடும்பம் செல்வ செழிப்பில் வாழ்ந்திருக்கலாம். விஜய நகர ஆட்சி காலம் தொட்டு தமிழ் புலவர்கள் வடுக மன்னர்களை புகழ்ந்து பாடியே வறுமையை போக்கிக் கொண்டார்கள். அது இன்று வரை தொடர்வதை காண்கிறோம். ஆனால் பாவாணர் அப்படி செய்யவில்லை ! வடுகனிடம் கையேந்தி பிழைப்பு நடத்த பாவாணர் புலவர் அல்ல ! அவர் தமிழ் அறிஞர் ! வறுமையிலும் தமிழ் மொழியை உலக மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்ந்தறிந்து வானுயர உயர்த்திவிட்டார் !

ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தனின் தோற்றமும் தமிழர் மரபும் என்ற பொருளில் எழுபத்தி ஐந்து நிமிடங்கள் உரையாற்றினார். அன்று இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவரை காலதேவன், நீ தமிழுக்கு செய்த தொண்டு போதும், இனி வருங்கால தமிழ் சமுதாயம் அதை முன்னெடுத்து செல்லட்டும் “வா” என இவ்வுலகை விட்டு அழைத்து சென்று விட்டான் (15/ஜனவரி/1981).

பெருஞ்சித்திரனாரால் மொழி ஞாயிறு என அழைக்கப்பட்ட தேவநேய பாவாணரை திராவிட மொழி ஞாயிறு என பட்டம் கட்டி திராவிடத்துக்கு சொந்தமாக்கினர் திராவிடவாதிகள் !

பாவாணரின் படைப்புகள் அனைத்தும் கருணாநிதியால் அரசுடைமையாக்கபட்டு விட்டது. தனியார் வசம் இல்லாததால் அவர் படைப்பின் பிரதிகள் பரவலாக எங்கும் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது இணையதளங்களில் உள்ளது. தமிழர்களே ! அதில் படித்தறிந்து கொள்ளுங்கள். அன்னாரின் பிறந்த இந்த நன்னாளில் உலக தமிழர்கள் அனைவரும் இன்று முதல் தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டி என சொன்ன ஈ.வெ.ரா.வை விட்டு விட்டு, தமிழ், தமிழினம் என்றாலே பாவாணரும், பாவாணரின் படைப்புகளும் உங்கள் எண்ணங்களில் நிலை பெற்று சிறக்க வாழ்த்துகிறோம் !

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).


வடுகத்தின் வல்லாதிக்க திமிர் !


வடுகத்தின் வல்லாதிக்க திமிர் !

 



ஈழ தமிழனின் குருதியில் ஈழம் சிவந்த பின் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தியத்தின் குறிப்பாக, தமிழகத்தின் அரசியலை விழிப்புணர்வுடன் காண வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.

 

ஈழம் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு அவசியமான களம் என்றாலும் அதற்கு தடையாய் இருந்த தமிழர்களை களப்பலியாக்கிட தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நல்கியவர்கள் இந்த திராவிடர்களின் தலைமைக் கூட்டமான வடுக மேலாண்மை கூட்டமே !.

 

சமீபத்தில் கோவையில் நடந்த கம்மவர் நாயுடு எழுச்சி பேரவை கூட்டத்தில் மதிமுக வின் ஊடக விவாதக்குழு உறுப்பினரும், கழக பேச்சாளருமான (தற்போது நீக்கப்பட்டுள்ள) தனமணி வெங்கடபதி என்னும் பெண்மணி தமிழர்களை இலெமூரியாவிலிருந்து வந்த வந்தேறிகளெனவும் வடுகர்களே இம்மண்ணிற்கு சொந்தமுடையவர்கள் என்றும், வடுகர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இதில் அஇஅதிமுக மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இதில் அனைவரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்களாகினும் வடுக இன ஓர்மையில் ஒன்றுபட்டவர்களாவார்கள். தமிழனை ஆள்வதில் தான் இவர்களுக்குள் போட்டியே தவிர தமிழனின் உழைப்பை சுரண்டுவதிலும், அடிமை கொள்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், தமிழனை தாழ்த்துவதிலும் தார்மீக ஒற்றுமை கொண்டவர்கள்.

 

தமிழனோ, தேவ நேய பாவாணர் சொல்லுவது போல் மதப்பித்து, கொடை மனம், தன் இன பகையால் பிளவுண்டு கிடக்கிறான். நம்மன்னர்களிடமிருந்த இந்த மூன்று பண்பினாலேயே நம் இனம் வடுக பிராமணியத்திடமும் வடுகனிடமும் அடிமைபட்டது.

 

குமரிக்கண்டத்தில் தொடங்கி வேங்கடம் வரை பரவி வாழ்ந்தவன் தமிழன் ! வடக்கிலிருந்து வேங்கடம் தாண்டி எந்த அதிகாரமும் தமிழக மண்ணில் நுழைந்ததில்லை. தமிழக மண்ணில் உட்புகுந்த பிராமணியத்தால் உருவாக்கப்பட்ட வைதீகமே தமிழக மன்னர்களை பலவீனப்படுத்தியது. அதுவே வடுகர்கள் இம்மண்ணை ஆள வேங்கடம் தாண்டி உட்புக காரணாமாயிற்று.

 

விஜயநகர படையெடுப்பின் போது இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட கள்ளர் குல தமிழ் மக்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடி நத்தம், மேலூர் பகுதிகளில் நிலை கொண்டு வாழ்கிறார்கள். தன் பூர்வீகம் திரு வேங்கடம் என்பதை எத்தனை கள்ளர் குல தமிழ் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

 

ஏமாந்த தமிழ் மன்னர்களால் பிராமணியம் தழைக்க ஆரம்பித்தப் பொழுது அதை வீழ்த்தவே தமிழகத்தின் எல்லைப்புறங்களில் வாழ்ந்து வந்த வேளிர் மரபினர் களமிறங்கினர் அவர்களே களப்பிரர்கள் எனப்படுகின்றனர். (களப்பிரர்கள் கன்னடர்கள் அல்ல ! கன்னடம் முழுமையாக பரிணமித்தது கி.பி 8-ம் நூற்றாண்டு ஆகும். களப்பிரர் ஆட்சியோ கிபி 6-ம் நூற்றாண்டோடு முழுமையாக முடிவுற்றது). களப்பிரர்கள் ஆட்சியில் தான் பிராமணியம் ஒடுக்கப்பட்டது. ஆசிவகம் என்னும் சமணம் (ஜைனம் அல்ல) செல்வாக்கு பெற்றது. களப்பிர மன்னர்களால் தமிழகம் பல்வேறு பகுதிகளாக பிரித்து ஆளப்பட்டு வந்தது. மக்களுக்கு பயனுள்ள, நல்லொழுக்க இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இருப்பினும் மீண்டும் பிராமணியத்தின் சூழ்ச்சியால் களப்பிரர்கள் ஆட்சி சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வடுக வந்தேறிகள் களமிறங்க வழிவகுத்தது.

 

இன்று தமிழனின் வாழ்வியலில் அனைத்துத் துறைகளிலும் வடுக தலைமை இன்றி இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். நீங்கள் இறை பக்தரா ? வடுக பிராமணியத்திடம் கையேந்த வேண்டும். நீங்கள் கடவுள் மறுப்பாளரா ? வடுக கன்னடனால் அடையாளபடுத்தப்படுவீர்கள் (உ-ம் பெரியாரிஸ்ட்). நீங்கள் மார்க்சிய நாத்திகனா ? உங்கள் கட்சி தலைமை, தலைவன் வடுகனாய் இருப்பான் அல்லது மலையாளியாய் இருப்பான். இந்துத்துவ அமைப்பா ? அங்கேயும் வடுக ஆதிக்கமே ! மத நல்லிணக்கமா ? அங்கேயும் வடுக ஆதிக்கமே. நீங்கள் எந்த ஒரு திராவிட பெயர் தாங்கிய கட்சியில் இருந்தாலும் அங்கே ஒரு வடுகனோ, கன்னடனோ அல்லது ஆரிய மற்றும் திராவிட அடிவருடியான தமிழ் தலைவனோ இருப்பான்.

 

இது தவிர அனைத்து அரசு துறைகளிலும், சினிமாதுறை, சிறு, சிறு இயக்கங்கள், குழுக்கள், கமிட்டிகள் என அனைத்திலும் திராவிட குறிப்பாக வடுக தலைமை இன்றி எந்த இயக்கமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

இன்னும் தமிழன் ஏமாந்து தான் வாழ்கிறான் ! எல்லாம் முடிந்தாயிற்று ! தன்னையும் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழனை மட்டும் சாதியை கைவிடும்படி ஈ.வெ,ரா, மூலம் தமிழனுக்கு போதித்து வந்த வடுக கூட்டம் தன் சாதி பிரிவையும் அடையாளத்தையும் அப்படியே வைத்துள்ளது.

 

வரும் தேர்தலிலாவது ஆரிய கட்சிகள் அல்லாத, திராவிடம் என்ற பெயரில் வடுக, கன்னட, மலையாள தலைமையில்லாத, ஈ.வெ.ராவை வழிகாட்டி என சொல்லாத, கருணாநிதியை தலைவனாக ஏற்காத தமிழனின் தலைமையில் கட்சி இருந்தால் அதற்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் ஏதாவது சுயேட்சை தமிழனுக்கு வாக்களியுங்கள்.

 

நம் மீது வல்லாதிக்கம் செய்யும் வடுக திமிரை புரிந்து கொள்ளுங்கள். இனிமேலாகினும் நாம் தமிழர் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆன்மீகமானாலும் நாத்திகமானாலும் வடுகனே தலைமை தாங்குகிறான். அதை நம்பி ஏமாந்த தமிழன் வீழ்ந்து போகிறான்.

 

“ ஆத்திகனாக நாத்திகனாக வடுகன் ஆக  

  இதையறியா தமிழன் கெடுவானாக “

 

நாம் தமிழர்கள், மதமற்றவர்கள் ! நாம் இந்துவுமல்ல ! திராவிடனுமல்ல ! என புரிந்து கொண்டாலே தமிழ் தேசியம் மலர துவங்கும் ! வடுக வல்லாதிக்க திமிர் ஒடுங்கும் !  

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).