தமிழ் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாள் :-


தமிழ் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாள் :- தேதி:-07/பிப்ரவரி/1902




தமிழே உலகில் தோன்றிய முதல் மொழி என்றும் உலகில் மாந்தர் இனம் தோன்றியது குமரிக்கண்டமே என்றும் உலகின் செம்மொழிகளை ஆய்ந்தறிந்து சொல்லாராய்ச்சி வல்லுனராகவும், தமிழ் அறிஞராகவும் திகழ்ந்தவர் பாவாணர் ஆவார். இவரின் தமிழ் மொழியின் இலக்கிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் இன்று தொல்லியல் ஆய்வின் மூலம் நிருபணமாகி வருகிறது. (உதாரணம் மணலூர் கீழடி தொல்லியல் ஆய்வு)

கிரேக்கம், இலத்தின், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளெல்லாம் தமிழ் சொற்களை கடன் கொண்டே விளங்கின, விளங்குகின்றன என நிறுவினார்.

தமிழில் கலந்துள்ள பிற மொழி சொற்களை நீக்கிவிட்டாலும் எந்த மொழியின் துணையுமின்றி தனித்து இயங்கும் வல்லமை பெற்றது தமிழ் மொழி என்றும், திராவிட மொழிகளோ, சமஸ்கிருதமோ தமிழ் துணையின்றி இயங்காது என்றும் தமிழும், திராவிடமும் ஒன்றல்ல என்றும் ! ஆரியமும் திராவிடமும் ஒன்றே என்றும் நிறுவியவர் !

தமிழ் பால் என்றால், திராவிடம் தயிர் என்றும், பால் தயிராகலாம் ஆனால் தயிர் மீண்டும் பாலாக மாறாது என்றும், பாலோடு தயிர் சேர்ந்தால் பால் திரிந்து தயிர் ஆகுமே தவிர, பாலோடு சேர்ந்த தயிர் மீண்டும் பாலாக மாறாது என்றும் திராவிடமென்பது தமிழுக்கு என்றுமே தீயது என்று நிறுவியவர் !

கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவரது தமிழ் மொழி ஆய்வுக்கு அரசின் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அதிகம் கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டார். ஈ.வெ.ரா. அவரை அலட்சியம் செய்தார். அவரின் குடும்பம் வறுமையில் தான் வாடியது. கருணாநிதி சொல்லுவது போல் தமிழ் ஆய்வு முடிவுகளை செய்திருந்தால், அவரது குடும்பம் செல்வ செழிப்பில் வாழ்ந்திருக்கலாம். விஜய நகர ஆட்சி காலம் தொட்டு தமிழ் புலவர்கள் வடுக மன்னர்களை புகழ்ந்து பாடியே வறுமையை போக்கிக் கொண்டார்கள். அது இன்று வரை தொடர்வதை காண்கிறோம். ஆனால் பாவாணர் அப்படி செய்யவில்லை ! வடுகனிடம் கையேந்தி பிழைப்பு நடத்த பாவாணர் புலவர் அல்ல ! அவர் தமிழ் அறிஞர் ! வறுமையிலும் தமிழ் மொழியை உலக மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்ந்தறிந்து வானுயர உயர்த்திவிட்டார் !

ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தனின் தோற்றமும் தமிழர் மரபும் என்ற பொருளில் எழுபத்தி ஐந்து நிமிடங்கள் உரையாற்றினார். அன்று இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவரை காலதேவன், நீ தமிழுக்கு செய்த தொண்டு போதும், இனி வருங்கால தமிழ் சமுதாயம் அதை முன்னெடுத்து செல்லட்டும் “வா” என இவ்வுலகை விட்டு அழைத்து சென்று விட்டான் (15/ஜனவரி/1981).

பெருஞ்சித்திரனாரால் மொழி ஞாயிறு என அழைக்கப்பட்ட தேவநேய பாவாணரை திராவிட மொழி ஞாயிறு என பட்டம் கட்டி திராவிடத்துக்கு சொந்தமாக்கினர் திராவிடவாதிகள் !

பாவாணரின் படைப்புகள் அனைத்தும் கருணாநிதியால் அரசுடைமையாக்கபட்டு விட்டது. தனியார் வசம் இல்லாததால் அவர் படைப்பின் பிரதிகள் பரவலாக எங்கும் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது இணையதளங்களில் உள்ளது. தமிழர்களே ! அதில் படித்தறிந்து கொள்ளுங்கள். அன்னாரின் பிறந்த இந்த நன்னாளில் உலக தமிழர்கள் அனைவரும் இன்று முதல் தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டி என சொன்ன ஈ.வெ.ரா.வை விட்டு விட்டு, தமிழ், தமிழினம் என்றாலே பாவாணரும், பாவாணரின் படைப்புகளும் உங்கள் எண்ணங்களில் நிலை பெற்று சிறக்க வாழ்த்துகிறோம் !

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக