பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் இன எதிர்ப்பே !


பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் இன எதிர்ப்பே !


             
                                                         
பெரியார் என்பதை நம் இனத்தின் பெரியவர் என எண்ணி இனி ஏமாற வேண்டாம். அதற்கு பதில் இக்கட்டுரை முடியுமட்டும் எளிதில் புரிந்து கொள்ள பெரியார் என்பதை .வே.இரா.வின் பட்ட பெயராக வைத்துக் கொள்வோம்.

                                
பார்ப்பனர் என்றால் யார் ? பிராமணர் என்றால் யார் ? பெரியார் அதிகமாக பார்ப்பனர் என்ற சொல்லையே தமிழர்களின் எதிரியாகக் காட்டுவதும் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் பிராமணர் என்ற பதத்தை எதிரியாகக் காட்டுவது ஏன் ? அதற்கான அரசியல் காரணம் என்ன ? என யாரவது கேட்டால் கேட்டவர் மீது ஒட்டு மொத்த திராவிடவாதிகளும் பாய்ந்து பிராண்டுகிறார்கள். பார்ப்பான் எவ்வளவு கொடியவன் தெரியுமா ! அவர்கள் நச்சுப் பாம்பை பேன்றவர்கள் ! அவர்களுக்கு வக்காலத்து வாங்க முன் வருபவன் ஒரு இந்துதுவ வாதியாகத்தான் இருப்பான் என நம் தமிழர்களே நம்மை தூற்றுகிறார்கள். பார்ப்பான் என்ற சொல்லுக்கும் பிராமணன் என்ற சொல்லுக்கும் இடையிலான அரசியல் காரணத்தை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு அதற்கான வரலாற்றுக் காரணத்தை பார்ப்போம் .

  
பார்ப்பான் என்றால் நிர்வாகி, மேலாளன்(மேண்மையானவன்)
  
பார்ப்பனியம் என்றால் மேலாண்மை, மேல் தட்டு தன்மை(management)
  
பிராமணர் என்றால் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்ப்பாட்டின் (மதவியல்) கோட்பாட்டின் சித்தாந்தி.
  
பிராமணியம் என்றால் மாற்ற இயலா ஆளும் வர்க்க கோட்ப்பாட்டின் (பாசிச அரசு) சித்தாந்தம் என்பதே !

                               
பார்ப்பான் என்ற சொல் தமிழில் தமிழன் நாகரிகம் அறிந்த காலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு பதவிக்கான சொல் என்பதை முந்தைய வரலாற்றின் மூலம் அறிவோம். பிராமணன் என்ற சொல் உழைக்கும் மக்களை சுரண்டும் அதிகாரத்தை மாற்ற இயலாமல் தொடர்ந்து வழி நடத்திக் கொடுப்பவனுக்கு கொடுக்கப்பட்ட சொல். இரண்டும் தோற்றத்தில் மேட்டுமை தன்மை உடையது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல ..பார்ப்பான் என்பது பதவி ! பிராமணன் என்பது அரசியல் ! பார்ப்பான் தமிழன் ! தமிழ் மண்ணில் பிராமணன் என்பவன் தெலுங்கன், கன்னடன், மராட்டியன். திராவிட அரசுகள் தமிழ் மண்ணை அடிமை கொள்ள பாதை அமைத்துக் கொடுத்தவர்கள். மொத்தத்தில் பெரியார் பிறந்த அதே தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். பெரியார் தமிழை காட்டு மிராண்டிகளின் மொழி என்றால் சங்கராச்சாரியார் என்ற பிராமணன் தமிழை நீஷ பாஷை என்பார். இருவரும் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பார்ப்பான் எவனும் தமிழை பழிப்பதில்லை ( சங்க இலக்கியங்களில் பிராமணர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. ஆனால் அந்தணர், பார்ப்பார், ஐயர், என்ற சுட்டுச் சொற்களே காணப்படுகின்றன ஆக அந்தணர், பார்ப்பார், ஐயர் என்ற பொருள் கொள்ளத்தக்க சமூகம் தமிழுக்குச் சொந்த மானவையே )

                                
தமிழர்களை அடிமை கொள்ள திராவிடர்களின் ஆளுமையை என்றைக்குமே விட்டுக் கொடுக்காமல் தமிழர்களை தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருக்க வேண்டுமானால் அவர்களின் அறிவு ஜீவியான பார்ப்பனர்களை பிளவு படுத்திட வேண்டுமென  திட்டமிட்டவர் .வெ.இரா. எனவே தமிழில் தோன்றிய பார்ப்பான் என்ற சொல்லின் மீது பிராமணர்கள் வரலாற்றில் செய்திட்ட சூழ்ச்சிகள் அனைத்தையும் போட்டு தமிழுக்கும், தமிழனுக்கும் நிரந்தர பகையாளிகள் பார்ப்பனர்கள் என நம்ப வைக்கப்பட்டது. பார்ப்பான் தமிழன் என உணர்ந்து தமிழ் தேசிய நீரோட்டத்தில் என்றுமே கலந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பானை ஆரிய பார்ப்பான் என்று சொல்லி ஆரிய கலப்பால் உருவான தெலுங்கு, கன்னட, மராட்டிய பிராமணர்களை காப்பாற்றினார். கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் திராவிடக்கொள்கையை தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளாதது .வெ.இராவுக்குத் தெரியும் என்றாலும் தமிழனை பிளவு படுத்திய கையோடு நாம் திராவிடர்கள் என நம்ப வைத்தார். பெருவாரியான தமிழர்களிடையே பேசுகையில் தமிழர்களாகிய நாம் என்பார். ஆனால் தனிப்பட்ட முறையில் பொதுவாக பேசும் போது தன்னை கன்னடன் என சொல்லிக்கொள்ள தவறியதில்லை.

                
.வெ.இராவின் சாதி மறுப்பு என்பது அதிக கலப்பில்லா தமிழினத்தை எப்படியாகிலும் கலப்பினமாக மாற்றி விட வேண்டுமென துடித்தார் . இங்கே பிற இனத்தை சேர்ந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர்கள் என அனைவரும் சாதியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். ஆகவே சாதி மறுப்பை ஊக்குவிப்பதன் மூலம் தனி தமிழ் தேசிய ஓர்மையை சீர்குலைத்து விட முடியும் என நம்பினார். பெரியாரின் சாதிமறுப்பு தமிழனை வரணாசிரமத்தில் இருந்து மீட்டெடுக்க அல்ல என்பதை தமிழர்களில் பலர் காணத் தவறினார்கள். தமிழர்களிடையே சாதி என்னும் கொடிய தீயை மூட்டி தீண்டாமை என்னும் கொடிய வழக்கங்களையெல்லாம் புகுத்தி தமிழ் மக்களை ஒருவருக்கொருவர் பகைத்துக்கொள்ளச்செய்து உதிரிகளாக்கியவர்கள் தமிழ் பார்ப்பனர்கள் அல்ல தமிழனின் வரலாற்று நெடுகிலும் பிராமண, கன்னட, வடுக, ஆட்சியாளர்களே !

                         
பெரியாரும் திராவிடவாதிகளும் பார்ப்பான் என்று பிராமணனை சொல்லி விடுவதால் நம் மீதான சூத்திர இழிவு நீங்கிவிட்டது என கருதுவது முட்டாள் தனமானதாக தெரியவில்லையா ! சனாதனத்தை நம் பிற்ப்படுத்தப் பட்ட சாதிகள் ஏற்றுக்கொண்டது போலவே தமிழ் பார்ப்பனரும் ஏறுக்கொண்டனர். ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழி நிலைக்குத்தள்ளிய பிராமணியத்தின் மேட்டுமை தன்மையை இடித்துரைக்காமல் நம் இனத்தின் பார்ப்பனரின் உயர்வை கண்டு இடித்துக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களோடு நேரடி எதிரியாக களத்தில் நிற்ப்பவர்கள் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளே அன்றி தமிழ் பார்ப்பனர்கள் அல்ல. பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள் தாழ்த்தப்பட்டவனை கட்டித்தழுவ தயாராய் இருப்பது போலவும், பார்ப்பான் மட்டுமே இழிவாய் கருதுவது போல் நினைப்பது சுத்தப் பைத்தியக் காரத்தனமில்லையா!
                                                        
                                 
தாழ்த்தப்பட்டவனோடு நேரடியாக களத்தில் எதிரியாய் இருப்பவர்கள் தமிழ் இன பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளும், வடுக, கன்னட, மலையாளிகளில் உள்ள மேட்டுக் குடிகளும் , முஸ்லீம், கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த மேட்டுக் குடிகளும் தான் என்பதை மறுக்க இயலாது. பிராமணனை பார்ப்பான் என சொல்லுவதால் நம்முடைய சூத்திர இழிவு நீங்கி விடும் என திராவிடவாதிகள் கட்டி விட்ட பொய்யை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தன்னுடைய மேட்டுமைத் தன அதிகாரத் திமிரை பார்ப்பான் என்ற சொல்லின் திரைமறைவில் மறைக்கப்பார்க்கிறது என கருத வேண்டி இருக்கிறது. பார்ப்பான் என்னும் தமிழனை தமிழினத்தின் எதிரியாக காட்டிய பெரியார் ஆதித் தமிழனை ஆதி திராவிடன் என்று அழைக்கத்தவறவில்லை. ஆக தமிழினத்தின் அறிவு ஜீவியையும், உழைக்கும் வர்க்கத்தையும் தமிழினத்திலிருந்து பிரித்து விட்டு மீதி இருக்கும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளோடு வடுக,கன்னட, மலையாள கூட்டத்தையும் ஒன்றிணைத்து திராவிடப் போர்வையால் போர்த்தினார் பெரியார். ஆதலால் தான் திராவிடம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத்தான் நன்மை பயப்பதாக உள்ளது. அதிலும் வடுக, கன்னட,மலையாளிகளே அதிக நன்மை அடைகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதிகளை பெரியார் தள்ளியே வைத்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையும் பெரியார் செய்யவில்லை. பல நேரங்களில் திராவிட ஆண்டைகளுக்கு ஆதரவாகவே செயல் பட்டார். பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள்தான் திராவிடத்தை அதிகம் உயர்த்திப்பிடிக்கிறார்கள் காரணம் பார்ப்பனனின் மேட்டுமையின் மீதுள்ள பொறாமை அத்துடன் தாழ்த்தப் பட்டவன் மீது இவர்களுக்கு இருக்கும் தீண்டான்மை. இது இரண்டையும் மூடி மறைக்க பயன்படுவது திராவிடம். எனவே திராவிடத்தையும் பெரியாரையும் இவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆக இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது சாதி மறுப்பு என்ற பெயரில் தமிழின எதிர்ப்பே என்பது புலனாகிறது.

 

பார்ப்பான் தமிழன் !! பிராமணன் ஆரியன் !! கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2016/02/blog-post_28.html
                         

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக