பொங்கலோ பொங்கல்:-

 

பொங்கலோ பொங்கல்:-

 


 

தமிழனின் இயற்கை வளங்களை அழிப்பது, பண்பாட்டை சிதைப்பது, அரசியலை மாற்றி அமைப்பது என தொடர்ந்து தமிழர்களின் மீது இந்திய தேசிய அரசியல் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழர்களாகிய நாம் யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !! என்கின்ற உணர்வில் இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து இன, மத விழாக்களையும் ஆர்வமுடன் கொண்டாடி வருகிறோம். இனி ஒரு போதும் ஆரிய விழாக்களை தமிழகத்தில் கொண்டாடுவதில்லை என இந்த தை திங்களில் உறுதி மொழியேற்ப்போம். இந்த ஆரியக் கூட்டம் நீதி, நிர்வாகம், அரசு, பண்பாடு என அனைத்துத் துறைகளுக்குள்ளும் தனது கால்களை பரப்பிவைத்துக்கொண்டு, எமக்கு அதிகாரமில்லை எல்லாம் அவர்கள் தான் என்பது போல ஒருவரை ஒருவர் பழிப் போட்டு நம்மை பலி தீர்த்துக்கொள்கிறார்கள். நம்மை இந்துக்கள் ஆக்கும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியையே கண்டு வருகிறார்கள். நம் கடவுள்களை களவாடிக்கொண்டு இந்துத்துவம் என்ற வருணாசிரம அரசியலை நிலைநிறுத்த முயற்சித்து ஒட்டு மொத்த இந்தியாவில் தமிழர்களிடம் மட்டும் தான் தோல்விகண்டு வருகிறார்கள்.

 

உலகமயமாக்கல், சர்வதேசியம் என்ற வளையத்துக்குள் கொண்டு சென்று விட்டு, போலி சுதேசி பேசி வருகிறார்கள். சிறு தொழில், குறுந் தொழில், கைத் தொழில், கிராமியத் தொழில், விவசாயம் அது சார்ந்த அனைத்தையும் படுகுழியில் தள்ளிவிட்டு, பெரு முதலாளிகளையும், கார்ப்ரேட் கம்பெனிகளையும் வளர்த்துவிட்டுக் கொண்டு நம்மிடம் போலி சுதேசி பேசிவருகிறார்கள்.

 

இதில் திராவிடத்தை கொள்கையாகக் கொண்ட கட்சியும் ஆரியத்தோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு தமிழர்களை வஞ்சித்து விட்டார்கள். அந்த துன்பத்தைத் தான் நாம் இன்று அனுபவித்து வருகின்றோம். ஆரியத்தோடு மல்லுக்கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

 

நாம் நாமாக (தமிழன் தமிழனாக) வாழ்வோம். நமக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்துவிட்டு நம் இனம் காக்க, நம் பண்பாடு காக்க முன்னிற்ப்போம். நம் வீட்டு பிள்ளைகளுடன் (காளைகளுடன்) நாம் ஓடி விளையாட எவனோ ஒருவன் தடை சொல்வதை ஏற்க்க இயளாது.

 

“இனி நாம் இந்தியர்கள் அல்ல ! தமிழர்களே !! என்று முழங்குவோம்” 

 

நம் மீதான தடைகளை தாண்டி நம் காளைகளுடன் விளையாடுவோம். இனி இந்தியன் அல்ல தமிழன் என்று முழங்குவோம் என் இன விழாவைத் தவிற ஆரிய விழாக்களை ஒரு போதும் கொண்டாட மாட்டோம் என பொங்கி வரும் பொங்கல் மீது சபதமிட்டு உறுதி மொழியேற்ப்போம்.

 

பொங்கட்டும் பொங்கல் தமிழன் உணர்வுபெற !

பொங்கட்டும் பொங்கல் தமிழன் எழுச்சி பெற !!

பொங்கட்டும் பொங்கல் தமிழன் உரிமை பெற !!!

 

“பொங்கலோ பொங்கல்”.

 

#we_do_jallikattu #ban_peta #pongal #jallikattu

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக