ஆரிய விழாக்கள் நமக்கெதற்கு !!


ஆரிய விழாக்கள் நமக்கெதற்கு !!

 

 

அனைத்து ஆரிய விழாக்களையும் புறந்தள்ளுங்கள். குறிப்பாக தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்றவை ஆரியம் நம் அறியாமையை பயன்படுத்தி நம் பண்பாட்டில் உட்புகுத்திய விழாக்கள் ஆகும். இது தவிர பிற தேசிய இன விழாக்களான ஓணம், ஹோலி போன்ற ஆரிய கலப்பு விழாக்களையும் புறந்தள்ளுங்கள்.

 

ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டிகளின் விழா என்றால் ஆரியர்களின் விழாக்களும், பிற தேசிய இனங்களின் விழாக்களும் பகுத்தறிவுக்கு உகந்த விழாக்களா ?! அசிங்கமும் ஆபாசமும் முட்டாள் தனமும் நிரைந்த விழாக்கள் தானே ஆரிய விழாக்கள் ?!

 

நம் மீது தொடுக்கப்படும் பண்பாட்டு தாக்குதலை முறியடிக்க எதிர் பண்பாட்டுத்தாக்குதலை நாமும் தொடுப்போம்.

 

ஆரிய விழாக்களை கொண்டாடுவதிலிருந்து முற்றாக நாமும் நம் குடும்பமும் சேர்ந்து புறந்தள்ளுவோம்.

 

பண்பாட்டுத் தாக்குதலை பண்பாட்டு எதிர் தாக்குதல் மூலம் முறியடிப்போம்.

 

நம் தமிழ் இன விழாவையும், நம் குலதெய்வ வழிபாட்டு முறையையும் கொண்டாடி மகிழ்வோம்.

 

பல்லாயிரம் ஆண்டுகளாக பிற தேசிய இனங்கள் போல் கலப்பு தேசிய இனமாக மாற்றிட முயன்று தோல்வியை தழுவியதால், பண்பாட்டுத்திணிப்பை செய்து ஆரியம் ஓரளவு வெற்றிக் கண்டுவிட்டதால், சிறிது, சிறிதாக தமிழ் இனத்தின் பண்பாட்டை சிதைத்து அழித்து விடும் வேலையில் இறங்கியுள்ளது. எனவே நம் இன விழாக்கள் தவிர்த்து, ஆரிய விழாக்களை புறக்கணிப்போம்.

 

நாம் எடுக்க வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரி தான் தீர்மாணிக்கிறான் என்பதை நினைவில் கொண்டு ஆரியனின் பண்டிகைகள் தமிழகத்தைவிட்டு ஒழிக என்று பொங்கிவரும் பொங்கல் மீது சபதமிட்டு கூறுங்கள்.

 

தமிழனின் விழாக்களையும் சர்வதேச விழாக்களையும் கொண்டாடி மகிழ்வோம் ! ஏனெனில் நம் பொங்கல் விழா சர்வ தேசியம் முழுவதும் கொண்டாடப் படுகிறது, மதிக்கப்படுகிறது இந்தியாவைத் தவிர……!

 

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

#we_do_jallikattu #ban_peta #pongal #jallikattu #why_we_need_aariyans_festivals #avoid_aariyans_festivals #deepavali #holly #oonam

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக