காதலர் தினம் தீங்கானதா !?


காதலர் தினம் தீங்கானதா !?

 


வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் தான் படைத்த நாகரிகத்தை உலகமறிய செய்வதில் வியப்பில்லை அது ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பை அறிமுகப் படுத்தி இருக்கிறது அதில் ஒரு நாள் காதலர் தினமாக கொண்டாடப் படுகிறது.

 

 

காதல் என்றவுடன் சாதி, மத அடிப்படைவாதிகள் எல்லோரும் பதை பதைப்பு அடைகின்றனர். சமூக ஒழுக்கம் கெட்டுப் போய் விடும், விபச்சாரம் பெருகி விடும், காமம் தலைவிரித்து ஆடி விடும் என்கின்றனர்.

 

 

இப்படி காட்டுக் கூச்சல் போடுபவர்களின் பின்னணியில் விபச்சாரமும், கள்ள உறவும் மலிந்து கிடக்கிறது. இவர்களை பொருத்தவரை விபச்சாரமும், கள்ள உறவும் தான் காதல் போலும் !

 

 

இந்து மத அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இது ஏகாதிபத்திய கலாச்சாரம் தான், இந்த காதலர் தினம். இதை எதிர்த்தே ஆக வேண்டும் என்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் பிடியில் உலகமயம், தாராள மயம், பொதுச்சந்தை என எல்லா வற்றையும் ஏக போகத்துக்கு திறந்து விட்டுவிட்டு, கலாச்சாரத்தை மட்டும் காக்கப் போகிறார்களாம் இந்த பன்னாடைகள்.

 

 

எந்த ஒரு மூலதனமும் அதன் இலாப நோக்கிற்க்கேற்ற அரசியல் மற்றும் பண்பாட்டைக் கொண்டே செயல்படும். இன்று நாம் காணும் அனைத்து வகை வியாபார பொருட்க்களின் விளம்பரங்களும், இன்று எடுக்கப் படும் திரைப்படங்களுமே அதற்குச் சான்றாகும்.

 

 

காதல் என்பது ஏகாதிபத்தியம் நமக்கு புதிதாய் உருவாக்கி தந்த ஒரு திட்டமல்ல ! காதல் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் இயற்க்கை நியதி ! ஏக போகம் முதலீடு செய்த பல துறைகளில் காதலும் ஒன்று !

 

 

இன்று திரைப்படம் எடுக்கும் பாணியே மாறிவிட்டது. திருடன், மொல்லமாறி, வீட்டுக்கடங்காதவன், விட்டேத்தி, ஒழுக்கங்கெட்டவன், பொறுப்பற்றவன், குடிகாரன், ரௌடி, பொம்பள பொறுக்கி போன்ற கதாப் பாத்திரங்கள் தான் கதாநாயகன். இந்த கருமம் புடிச்சவனுகளை கதாநாயகி தேடித் தேடி, விரட்டி விரட்டி காதலிப்பாள். ஏனென்றால் ஆணுக்குரிய அத்தனை அம்சமும் இது மாதிரி பயலுக கிட்டத்தான் இருக்கிறது என்பாள். இந்த செயர்க்கையான, உண்மைக்குப் புறம்பான வாழ்வியலை, இளம் பெண்கள் மனதில் விதையூட்டுவதே இவர்களின் நோக்கம். இதில் தான் கோடி கோடியாய் பணம் ஈட்டுகிறார்கள்.

 

 

பெண் தற்ப்போது தான் அதிக அளவில் இந்த மெக்காலே கல்வி திட்டத்தின் தொடரில் படித்துவிட்டு அரைகுறை சமூக புரிதலோடு வெளியே வருகிறாள். அவளை படிக்கும் இடத்திலலிருந்து கல்வி மூலம் சமூக புரிதலை தவறாக புரியவைத்து, தொடர்ந்து கெடுத்து வந்து, அவளின் பருவ வயதில் சிறகடிக்கும் காதல் ஆசைகளை திசை திருப்பி, சமூக பண்பாட்டின் சிதைவுக்கும், சீரழிவுக்கும் பெண்ணே காரணம் என்ற பழிச்சுமையோடு, ஏகபோக கலாச்சாரமே சரியென, அவளை ஒப்புக் கொள்ள வைப்பதே இந்த முதலீட்டாளர்களின் நோக்கமாகும்.

 

 

இளம் இரத்தம் அடக்கினால் பொங்கி எழும். இந்த ஏகாதிபத்திய மதவாத கைக் கூலிகள் காதலிக்கும் இளம் ஆண், பெண் மீது தாக்குதல் தொடுப்பதும், அம்பலப்படுத்துவதும், இங்கேயே இப்பொழுதே திருமணம் செய்து கொள் என நிர்பந்திப்பதும் அவர்களை வேறு ஒரு முடிவை நோக்கி நகர்த்தி செல்கிறது. மதவாத பன்னாடைகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ?!

 

 

காதல் என்னும் பொது நியதிக்குள் திருமணம் தேவையா  அல்லது தேவை இல்லையா ! திருமணம் என்னும் பிணைப்புக்குள் இருவருக்குமான இணைப்பு நீடிக்குமா அல்லது நீடிக்காதா ! பெற்றோர்களுக்கு தெரிவிப்பதா கூடாதா ! பெற்றோர்கள் எதிர்ப்பார்களா, ஆதரிப்பார்களா ! இருவரின் தெரிவும் சரியா, தவறா ! இதுவெல்லாம் சம்பந்தப் பட்ட நபர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்குமான பிரச்சனை. இந்த மதவாத பன்னாடைகளுக்கும், சாதியவாத நாதாரிகளுக்கும் இதில் என்ன அக்கரை ! பெற்றோர்களே ! தேவையின்றி உங்கள் பிள்ளைகள் மீது காதலித்தார்கள் என்பதற்காக எவனேனும் பிரச்சனை செய்வார்களேயானால் அவர்களை செருப்பால் அடியுங்கள் ! பெற்றோர்களை தவிர பிள்ளைகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ வேறு எந்த நாதாரிகளுக்கும் எந்த உரிமையும் இல்லை.

 

 

பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் காலமெல்லாம் பிள்ளைகளுடன் வாழ்க்கைப் பயணம் மேற்க்கொள்ள போவதில்லை. பெற்றோர்களுக்காக காதலைக் கைவிடும் இளம் உள்ளங்கள் பெற்றோர்களின் காலத்திற்குப் பின் தான் அடைய நினைத்ததை அடையவில்லையே என்ற ஏக்கத்துடன் இழந்த மனதுடன் மரணிக்கின்றனர்.

 

 

இந்த ஆணாதிக்க சமூகத்தில் திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் உறவு கொண்டால், ஆண் வெற்றியாளனாகவும், பெண் தப்பு செய்தவளாகவும், கெட்டுப் போனவளாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்க சமூகத்தின் நியதியாகும் ! உறவு கொண்டவுடன் கெட்டுப் போக பெண் ஒன்றும் உண்ணும் பண்டப் பொருளல்ல!

 

 

வர்க்க பேதமற்ற சமூகமே, மனிதவியலின் ஒரு அங்கமாக பெண்மையை கருதும் ! அதுவரை பெண்ணுக்கு எதிர் பாலினத்தின் மீது காதல் வராமலிருக்க பெண் என்பவள் கல் சிலையல்ல !

 

 

இந்துத்துவவாதிகளின் வாழும் கடவுள் (காமுகன்) சங்கராச்சாரியார் கள்ளக் காதலியுடன் குடகு மலைக்கு மாருதி காரில் சென்றது போல் அல்லாமல் !, மக்கள் பிரதிநிதியாகி சட்டசபையில் உட்கார்ந்து சீன் படம் பார்த்த கர்னாடக பி.ஜெ.பி. எம்.எல்.ஏ.க்கள் போல் அல்லாமல் ! இஸ்லாத்தின் தௌகீது என்னும் நேர் வழியாகிய நபி வழியை நமக்குக் காட்டி விட்டு, மதர்சாவுக்கு வந்து போகும் அடுத்தவன் பொண்டாட்டியோடு காதல் ரசம் ஒழுகும் பி.ஜெயினுலாபுதீனின் கள்ளஉறவு போல் அல்லாமல் இளைஞர்களே காதல் புரியுங்கள்.

 

 

காதல் இயற்கையின் நியதி ! எதிர் எதிர் விசையின் ஏர்ப்பு ! அதுவே அணுவின் இயக்கம் ! நம் உலகத் திருமறையின் தத்துவ ஞானி திருவள்ளுவனின் வழி நின்று கற்பு நெறி தவறாத காதல் புரிந்து தமிழ் சமூகத்தை பண்படுத்துங்கள் ! நம் பாரதி சொன்னது போல்

 

காதல் காதல் காதல்

காதல் போயிற், காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

 

நன்றாக காதல் புரியுங்கள் ! அது உங்கள் உரிமை ! மேற்கண்ட கள்ளக் காதலை கை விட்டு, உண்மைக் காதலர்களாய் நம் மொழியை, இனத்தை, பண்பாட்டையும் காதலித்து நேர் வழியில் வாழ்ந்து வாழ்வை வளமாக்கி, தரமான சந்ததிகளை தமிழ் தேசத்திற்கு தந்திட வாழ்த்துகிறோம்.

 

 

வாழ்க காதல் ! வளர்க காதலர்களின் தமிழ் தேசம் !!

 

 

-தமிழர் வரலாற்று கழகம் ( சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை ).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக