"கமல் ஹாசன்" தமிழனா! கன்னடனா! மலையாளியா!


“கமல்ஹாசன்”

 

தமிழனா ! கன்னடனா ! மலையாளியா !



கமலஹாசன் என்னும் திரைப்பட நடிகர் புதிதாக ஒரு கட்சி ஒன்றை தொடங்கி, அதற்கு கொடியும், பெயரும் வைத்துவிட்டார். அது நாள் முதற் கொண்டு கமல் ஹாசன் பற்றிய சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன.

 

கமல் என்பது அவரது பெயர் ஹாசன் என்பது அவருக்கு வைக்கப்பட்ட துணைப் பெயர் அல்லது சிறப்புப் பெயர். அவருடைய பெற்றோர்கள் அவருடைய சகோதரர்களுக்கும் சாரு ஹாசன், சந்திர ஹாசன் என பெயரிட்டுள்ளனர். இன்று இவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கும் ஹாசன் என்னும் குடும்ப சிறப்புப் பெயரை இணைத்தே ஹாசன், (சு)ஹாசினி என்று பெயர் வைத்துள்ளனர்.

 

இவர்களின் அப்போதைய பூர்வீகம் தற்பொழுது கர்நாடகத்தை சேர்ந்த ஹாசன் மாவட்டம் என்னும் மலை நாடாகும். இவர்கள் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். தமிழகத்துக்குள் நுழையும் சாதகமான சூழ்நிலையில் பிழைப்பு தேடி வந்த கன்னட பிராமண குடும்பமாகும்.



தன் வாழ்ந்த இருப்பிட பெயர் தங்களுடன் என்றும் நிலைத்திருக்கவும், தாங்கள் தமிழர்களில்லை என்பதை எக்காலத்திலும் மறவாதிருக்கும் பொருட்டு ஹாசன் என்ற பெயரை தங்கள் பெயருடன், இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

 

பொதுவாக கன்னடர்களுக்கு தமிழனை, தமிழை இழிவுபடுத்துவதில் எப்பொழுதும் ஆனந்தமே மேலோங்கி இருக்கிறது. தன் கட்சிக்கு பெயரை மக்கள் நீதி மய்யம் என்று வைத்திருக்கிறார். மை என்பது ம் + ஐ = மை யாகும். ம,ய் என்னும் பொழுது ம் + அ = ம, அதை யடுத்து ஒரு மெய் எழுத்து என்பது தமிழ் மொழி மீது அத்து மீறி அவர்கள் செய்யும் குழப்பமாகும். இதைத்தான் பாவணர் கொல் குறும்பு என்கிறார். ஒரு மொழியை சிதைக்க முதலில் குழப்பம் தரும் வேளையாக எழுத்துக்களை சிதைப்பது, பின் சொற்களை சிதைப்பது, பின் வாக்கியங்களை சிதைப்பது, அத்துடன் சேர்ந்து தொடர்ந்து பண்பாட்டை சிதைத்துக் கொண்டே வருவது ! இந்த வேலையை திறம்படச் செய்ய அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது !

 

இதையே கன்னடத் தெலுங்கர் ஈ.வெ.ரா.வும் செய்தார். ‘ஐ’, ‘ஔ’ உயிரெழுத்துகளிலேயே சிறப்புப் பெற்ற எழுத்துக்கள் ஆகும். அந்த எழுத்திற்கான சிறப்பை வலுவிழக்க செய்வதில் அவர்களின் தமிழ் மொழி மீதான கொலை வெறி துவங்குகிறது. லை,ளை,னை,ணை என்ற எழுத்துக்களில் ல,ள,ன,ண எழுத்துக்களின் முன் முனையில் எழுதப்படும் கொம்பு நீக்கப்பட்டு விட்டதால் ‘ஐ’ எழுத்தின் முன் கொம்பு அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது. இனி அவ்வெழுத்துக்கள் தமிழில் இல்லை. இதை எழுத்துச் சீர்திருத்தம் என்கிறார்கள். ஒரு தேசிய இன மக்கள் பயன்படுத்தும் வளமையான மொழியில் சீர்திருத்தம் செய்ய தனி ஒருவனுக்கு எப்படி அதிகாரம் வந்தது ! தமிழ் அறிஞர் பெருமக்கள் கூடி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வருவது தகுமே தவிர, தனி ஒருவன் அதிலும், வேற்று இனத்தவன் செய்வது மொழி மீதான தாக்குதலேயன்றி சீர்திருத்தம் அல்ல !

 

தமிழில் ‘ஐயன்’ என்பது கன்னடத்தில் ‘அய்ய’ என்பதாகும். கமலஹாசனின் கன்னட மொழி பாசம் ‘ஐ’ என்னும் சிறப்பெழுத்தை அழித்து ‘அய்’ என்பது போல் மய் என்ற நடையை பின் பற்றுகிறார்.

 

இவர் தன்னை மலையாளி என்று கூறிக்கொள்கிறார். ஹாசன் மாவட்டம் கேரளத்தின் எல்லைக்கருகில் இருப்பதால் கேரளத்துடன் சேர்க்காமல் கர்னாடகத்துக்கு சென்றிருக்கலாம். கேரளத்தை ஆண்ட மன்னர்கள் ஹாசனையும் சேர்த்து ஆட்சி செய்திருக்கிறார்கள். ஹாசன் மாவட்டமும் கேரளத்தின் தொடர்ச்சியான மலை நாடு ஆகும்.

 

கேரளத்தில் நடந்த சினிமாக்காரர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய கமல் ஹாசன் தான் ஒரு தமிழனல்ல ! நான் பாண்டிய நாட்டானும் அல்ல ! நான் ஒரு மலையாளி என்று மகிழ்ச்சித் ததும்ப சொல்லி பூரிப்படைய, மலையாளிகள் எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்யும் காட்சியை யூ டியூப் சேனலில் kamalhassan son of kerala என்ற தலைப்பில் 3.20 நிமிடத்தில் வரும் காட்சியை கண்டு உணர்க !

 

அவர் தன் பெயரால் கன்னடனாகவும், உணர்வால் மலையாளியாகவும் உணர்வதால் திராவிடமும் என் கொள்கை என்பார். ஆனால் பிராமணர் என்பதால் இந்திய ஆரியமும் என் கொள்கை என்பார்.

 

எப்படியாகினும் கமல் ஹாசன் கன்னட பிராமணனோ அல்லது மலையாள பிராமணனோ ! ஆனால் நிச்சயமாக தமிழன் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. எந்தத் தமிழனாவது கமல் ஹாசன் மண்ணின் மைந்தன் என்பானாகில், அவனைப்போல் ஒரு கிறுக்கன் இவ்வுலகில் இல்லை.

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக