காவிரியும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் !

காவிரியும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் !


காவிரி நடுவன் மன்றம் அளித்த தீர்ப்பே தமிழனுக்கு ஏமாற்றம் தான் ! அதிலும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு தமிழர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் ஆகும். நிலத்தடி நீரை கணக்கிட்டு தீர்ப்பெழுதுவது துரோகம் ஆகும். நிலத்தடி நீர் நிலையானது அல்ல ! பருவ நிலை தவறும் பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இனி மேல்முறையீடு செய்யும் உரிமையை மறுத்தது தமிழனுக்கு செய்யும் மாபெரும் துரோகம் ! இந்த 177.25 டி.எம்.சி யும் கர்நாடகத்திலிருந்து மறுக்காமல் வழங்கப்படும் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை.


உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுத்தவர்கள் தான் இந்த கன்னடர்கள். நம் நிலைமை எப்படிப்பட்டதென்றால், “விட்டு கொடுத்த பிள்ளைக்கு விட்ட காணியும், முரண்டு பிடித்த பிள்ளைக்கு மொத்த காணியும்“ என்ற பழமொழியை மெய்யாக்கிவிட்டது.


தமிழர்களாகிய நம்மிடம் உள்ள ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தண்டனை ! நம் ஒற்றுமையின்மைக்கு காரணம், நம்மிடையே உள்ள இனப்பகையே ! இனப்பகை பெரும்பாலும் அடிமை புத்தி உள்ளவர்களிடம் தான் மலிந்து கிடக்கும்.


நம்மிடையே பகைகொண்ட தேசிய இனமாயினும், தேசிய கட்சிகள் அதிகாரத்தில் கோலோச்சினாலும், இன ஒற்றுமைக்கு தமிழர்களாகிய நாம் கன்னடர்களிடம் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


அங்கு தன்னை திராவிடன் என்று உணர்ந்த ஒரு கன்னடனும் இல்லை ! இங்கு தான், யார் தமிழன் ! என்பதை புரிந்து கொள்வதற்கே ஆயிரம் அறிவு தடைகளை கடந்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் இருந்து, தேசியத்தின் அவசியத்தை உணர்ந்தோம். காவிரியில் இருந்து சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை உணர்வோம்.


நம் விடுதலை எல்லை தூரமாயினும், பயணித்தே ஆக வேண்டும் என்பதே விதி !


-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக